NhAladiyAr 400 ~ Verse 118 ~ Different Cows, Same Milk!
ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த
பால்வேறு உருவின அல்லவாம் - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
Cows may be of different colours or breeds. But the milk offered by them remains the same - white in colour, irrespective of which colour a cow has on its skin or the breed it belongs to. Truth - the eternal reality known as ParaBrahmam - too is similar.
The paths that lead to the ultimate Truth (& the teachers or Gurus who offer them) may be as different as the many varieties of cows, but the outcome of all the paths - self-realization or liberation or mukthi - is the same, just like the milk of the cows.
நாலடியார் 400 ~ பாடல் 118 ~ பசுக்கள் பல, பால் ஒன்று!
பசுக்கள் பல்வேறு நிறத்தில், பல வகைகளைச் சார்ந்தவையாக இருந்தபோதும், அவை தரும் பால் வேறு நிறத்திலோ, வடிவத்திலோ இருக்காது (எல்லாப் பசுக்களின் பாலும் வெண்மையாகவே இருக்கும்). அறமும் - என்றும் நிலையான, பரப்பிரம்மம் எனப்படும் பேருண்மை - அத்தகையதே. அவ்வறத்தை, அதாவது மெய்ஞானத்தை (தனிப்பட்ட அனுபவமாகத் தன்னை உணர்தல்) அடைவதற்கு இருக்கக்கூடிய பலவகையான வழிகள் (யோக முறைகள்) பலவிதமான பசுக்களைப் போன்றவையே.
வழிமுறைகள் மற்றும் அவற்றை வழங்கும் ஆசான்கள் அல்லது குருமார்கள், பசுக்களைப் போல் பல்வேறு விதமாக இருந்தாலும், அவை அனைத்தின் மூலம் கிடைக்கும் பாலானது, மெய்ஞானம் எனப்படும் பேரின்பம் அல்லது வீடுபேறு என்ற விடுதலையே ஆகும்.
~Swamy
@PrakashSwamy
Online Casinos with the Best Casino Sites and Best Welcome Bonuses
ReplyDeleteSlots.lv Casino has been in operation since 1998. Now the casino is powered by Pragmatic Play, and you can luckyclub.live play games on all over the world.