ஔவைக் குறள் 152 ~ வழிமுறையும் செயல்முறையும்!
வாக்கும் கருத்தும் மயங்கும் சமயங்கள்
ஆக்கிய நூலினும் இல்.
சிறந்த சமயச் சொற்பொழிவுகள், அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் சிந்தனைத் துளிகள் அல்லது கருத்துக்கள், தீவிரமான ஆர்வத்துடன் ஒருவர் சார்ந்திருக்கும் சமயத்தில் உள்ள புனிதமான நூல்கள் ஆகியவை முக்தியை அளிக்காது.
பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒரு சமயத்தைத் (மதம்) தங்கள் பிறப்பிலிருந்து சாரந்திருக்கிறார்கள். சிலர் இடையில் வேறொரு சமயத்துக்கு மாறவும் கூடும். எல்லாச் சமயங்களிலும் பல புனித நூல்கள் உள்ளன. அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்ற அந்த சமயத்தில் உள்ள பெரியோர், அவற்றிலுள்ள மெய்ஞானம் அடைவது, ஒழுக்கத்துடன் வாழ்வது, இறையுணர்வு போன்றவற்றை விளக்கிக் கூறுவதுடன், அவற்றைப் பற்றிய தங்களது சிந்தனை மற்றும் அனுபவம் சார்ந்த கருத்துக்களையும் எடுத்துரைப்பார்கள். ஆனால், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அந்த நூல்களோ, அவை பற்றிய கருத்துக்களோ, முக்தியை அளிக்க இயலாது.
தன்னை அறிதல் அல்லது மெய்ஞானம் உணர்தல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நடைபெற வாய்ப்புள்ள ஒரு தனிப்பட்ட உள் அனுபவம் என்பதால், புனித நூல்களும், அவை பற்றிய விளக்கங்களும், அந்த அனுபவத்துக்கான வழிமுறைகளை வேண்டுமானால் வழங்கலாம், ஆனால் உண்மையான அனுபவத்தை - ஒருவரது உள்ளே உணரும் பேரானந்த நிலையை - அவற்றால் வழங்க முடியாது. இதனால், ஆன்மீகம் என்பது, மதத்தைக் கடந்த ஒரு தேடல் அனுபவம் என்பதைத் தெளிவாக அறியலாம்.
* ஔவைக் குறள் ~ ஸ்வாமியின் புதிய, எளிதான, குறள் வடிவில் அமைந்த ஔவையாரின் ஆன்மீக இலக்கியப் பெட்டகத்தை விளக்கும், குறுவலைப்பதிவுத் தொடர்.
ஸ்வாமியின்
நூற்றுக்கணக்கான மற்ற வலைப்பதிவுகளை நீங்கள் சுவைத்து மகிழலாம்.
Swamystery, Been
There Seen That, Swamyview, Swamyverse, Swamygraphy, SwamyQuote
(மேற்கோள்கள்), Swamyem (200+ #தினம்ஒருபதிகம் பதிகம் + விளக்கம்)
ஸ்வாமியுடன்
ஃபேஸ்புக், கூகிள்+ மற்றும் ட்விட்டரில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!