View vibrant Life in our Universe through Swamy's lens!

17 Apr 2017

NhAladiyAr 400 ~ 39 - Ongoing Daily Madness!

NhAladiyAr 400 ~ Verse 39 - Ongoing Daily Madness

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவார்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

Time simply passes away every day; Those who don't realise that its their lifetime that passes away everyday, even though they witness the passage of time daily, won't do anything purposeful or worthwhile on any day; yet, they remain pleased, assuming that more such new days will keep on coming, every day! (isn't this an "ongoing daily madness!")

The lifetime available for all beings in creation is limited. Lifetime isn't days or years, but the total number of breaths or prANA, inhaled & exhaled. Realising that fact, we should utilise every day for doing something purposeful for ourselves & others (whatever little we can). Celebrating the past in the form of birthdays, wedding anniversary, etc, is a waste of precious time, since the time (in this lifetime) that's spent in anyway isn't going to come back.

நாலடியார் 400 ~ பாடல் 39 - தினம் தொடர் மடமை

நாள்தோறும் பொழுது கழிவது, தனது ஆயுளின் ஒரு பகுதி கழிவதே என்ற உண்மையை  உணராதவர்கள், ஒவ்வொரு நாளும் அவ்வாறு தொடர்ந்து நாள் / நேரம் கழிந்துகொண்டே இருப்பதைக் கண்கூடாகப் பார்த்தபோதும், ஒருநாளும் அறச்செயல் / நற்செயல் எதுவும் புரியாமல், இன்னும் பல நாட்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் என்று மகிழ்ந்திருப்பார் (இது "தினம் தொடர் மடமை"  அல்லாது வேறென்ன!)

படைக்கப்பட்ட எல்லா உயிர்களின் வாழ்நாளும் ஒரு குறிப்பிட்ட அளவே. வாழ்நாள் என்பது நாட்களோ அல்லது வருடங்களோ அல்ல, மொத்தப் பிராணனின் / மூச்சின் எண்ணிக்கையே. அதை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு நாளையும் நம்முடைய மற்றும் பிறருடைய (நம்மால் முடிந்த அளவில்) நல்வாழ்விற்காக, பயனுள்ள ஏதாவது வகையில் செலவிடவேண்டும். பிறந்தநாள், திருமண நாள் என்று கடந்த காலத்தைக் கொண்டாடுவது பயனற்றது. ஏனென்றால், செலவழிந்த காலம் மீண்டும் இந்த வாழ்நாளில் வரப்போவதில்லை.

~Swamy
@PrakashSwamy

No comments:

Post a Comment

Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!