நாலடியார் 400 ~ பாடல் 258 ~ டிரம்ப் திருந்த ஏன் வாய்ப்பே இல்லை!
பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா வுடம்பிற்கு அறிவு.
பல நாள் வெண்மையான பாலினால் கழுவி உலர்த்தி வைத்தாலும், இயற்கையில் கருநிறமுடைய கரிக்கு வெண்மையுடையதாகின்ற தன்மை இருந்ததில்லை. அதுபோல, கல்வியறிவு பெறுதற்கேற்ற அறத்தைச் செய்யாத ஒருவனுக்கு, கோலினால் அவன் காதில் கடாவித் துளை செய்து, அறிவை விளக்கும் பொருள்களைச் சொல்லினும் அவை புகமாட்டா.
உலகின் மிகப்பெரிய வல்லசராகக் கருதப்படும் அமெரிக்காவின் ராஷ்டிரபதியான டொனால்ட் டிரம்ப் தினமும் ஏதாவது சர்ச்சைக்கிடமான கருத்துகளைத் தெரிவித்து, தற்போது உலகின் முதன்மையான நகைச்சுவை நாயகனாகத் திகழ்கிறார். இதுவரை அவரை யாராலும் அடக்க முடியவில்லை. அவரது அர்த்தமற்ற பேச்சை நையாண்டி செய்தலும், அவரது பதவிக்கும் மிகப்பெரிய சக்தி இருப்பதால், உலக அழிவு ஏற்படும் வகையில் ஏதேனும் அறிவற்ற செயலைப் புரிந்துவிடுவாரோ என்று உலகத் தலைவர்களும், மக்களும் எப்போதும் அச்சத்தோடு வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவரைப் போன்ற மூடர்களை என் மாற்ற முடியாது என்பதை, நாலடியார் பாடல் 258 தெளிவாக விளக்குகின்றது.
எத்தனை நாட்கள் நிலக்கரியைப் பாலால் கழுவி உலர்த்தினாலும், அதன் கருமை போய் அது வெண்மையாக வாய்ப்பில்லை. உள்ளத்தில் தூய்மையான நல்ல எண்ணங்களோ, உயர்ந்த சிந்தனைகளோ இல்லாத
டிரம்ப் போன்றவர்கள் அக்கரியை ஒத்தவர்கள்.
மேஜர் கெல்லி போன்ற
அவரது அருகாமையிலிருப்பவர்கள், கடுமையான முறைகளைப் பயன்படுத்தியேனும், நல்ல எண்ணங்களை விதைக்கவோ, சிறந்த சிந்தனையைத் தூண்டவோ முயன்றாலும், இயல்பாக உயர்கல்வி கற்காத, நற்செயல்கள் புரிந்து பழக்கமில்லாத, நல்ல எண்ணங்களுடையவரோடு சேராமல், எப்போதும் தன்னைப் புகழும் ஆமாம் சாமிகளுடனே இருந்து பழகிவிட்ட டிரம்ப் போன்றோருடைய பேச்சு மற்றும் செயல்கள், என்னதான் முயன்றாலும் இனி மாற வாய்ப்பில்லை. ஏனெனில், மாற்றம் என்பது எப்போதும் ஒருவரது உள்ளிருந்து ஏற்படவேண்டும். ஆகையால், தவறான ஒருவரை இத்தகைய உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுத்த தங்களது தவறை உணர்ந்து, மக்களும், அரசாங்கமும் சேர்ந்து அவரைப் பதவிநீக்கம் செய்வது ஒன்றே, உலகம் அமைதியாக வாழ வழிவகுக்கும்.
~ஸ்வாமி | @PrakashSwamy
Be Joyful & Spread the Cheer
Explore Swamy’s creation (blogs, quotes, poetry, reviews, photography…)
No comments:
Post a Comment
Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!